
Sunday, Dec 01, 2024
உண்மையுள்ள மனிதன் பூரண ஆசீர்வாதங்களினால் நிறைந்திருப்பான்
உண்மையுள்ளவர்களாக இருப்பதில் பல நன்மைகள் உள்ளன. Emunah என்ற Hebrew வார்த்தைக்கு நிலையான, விசுவாசமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஒருவரைப் பற்றிச் சொல்கிறது. ஆண்டவருடைய வார்த்தையையும், அவருடைய சித்தத்தையும் விடாமல் முயற்சி செய்பவரே பூரண ஆசீர்வாதங்களைப் பெறுவர்.
சிமிர்னா சபைக்கு ஆண்டவர் சொல்லும்பொழுது, நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்கு தருவேன். பிரியமான தம்பி தங்கையே, ஆண்டவர் உன்னிடத்தில் எதிர்பார்க்கிற ஒன்று உண்மை. ஒருவேளை எனக்கு பாடுகிற Talent இல்லையே! மற்றவர்களைப் போல எனக்கு Stage-யில் Message கொடுக்க முடியவில்லையே! இப்படி மற்றவர்களுடன் Compare பண்ணிக் கொண்டிருக்கிறாயோ! ஆனால் ஆண்டவர் உன்னிடத்தில் எதிர்பார்க்கின்ற ஒன்று உண்மை. எனவேதான் சாலொமோன் சொல்கிறார், “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்”.
2024-ம் ஆண்டின் கடைசி மாதத்தில் வந்திருக்கின்ற நாம், ஆண்டவருடைய பாதத்தில் நம்மை சற்று சோதித்துப் பார்ப்போம். இன்னும் நாம் ஒருவேளை உண்மையாயிருக்க முடியாமல் போனவற்றை நினைவு கூர்ந்து நம்மை அர்ப்பணிப்போம்.
2024-ம் ஆண்டு முழுவதும் நமது முன்னேற்றப்பணி மாவட்டங்களில் வாலிபர் கூடுகைகள் நடத்துவதற்கு ஆலயத்தைத் திறந்துக் கொடுத்த திருச்சபைப் போதகர்களுக்கும், முன்னேற்றப்பணி, பிராந்தியம் மற்றும் மண்டல செயலர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமது முதல் பணித்தளமாகிய பெரியமலையில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 தேதிகளில் நடைப்பெற்ற வாலிபர் முகாமை கர்த்தர் மகிமையாய் ஆசீர்வதித்துத் தந்தார். இந்த வாலிபர் முகாமிற்காக ஜெபித்து, உழைத்த தென் மண்டல வாலிபர்களுக்கு இயக்கமாய் நன்றி சொல்கிறோம்.
2025-ம் ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் “இறைவனின் தோட்டம்” (பூண்டி) என்ற இடத்தில் நடைபெற இருக்கின்ற வாலிபர் முகாமிற்காக தொடர்ந்து ஜெபியுங்கள். மேலும் 2025-ம் ஆண்டின் கேரீத் பத்திரிக்கைத் தடையில்லாமல் தொடர்ந்து வெளிவர ஜெபியுங்கள்.
கேரீத் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
தேவன் உங்களோடிருந்து உங்களை வழி நடத்துவாராக. ஆமென்!
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

-1.jpg)
Media (Play/View) : 