Tamil

Magazine - Tamil
சிறகடித்துப் பறந்திட வா!
Monday, Jun 02, 2025

arrow Click to enlarge.

                                                    சிறகடித்துப் பறந்திட வா!

என் அன்பு இளம் உள்ளங்களுக்கு,

கிறிஸ்துவின் இனிமையான நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!

வண்ணத்துப்பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு அழகாக இருப்பதால் இவை வண்ணத்துப் பூச்சி என்று அழைக்கப்படுகின்றன என்று நாம் அறிந்ததே.

இந்த பூச்சிகள் பூக்களிலிருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக (Thinly) இங்கும், அங்கும் சிறகடித்துப் பறப்பதும் மிக அழகாக இருக்கும். ஆனால் இவைகள் உருவாகின்ற விதங்களை நாம் பார்ப்போமானால் முட்டையிலிருந்து புழுவாக உருமாறி, அதன்பின் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், கடைசியாக அழகான ஒரு வண்ணத்துப் பூச்சியாய் பறந்து செல்வதைக் காண்கிறோம்.

அன்பு வாலிபர்களே, கிறிஸ்துவானவர் என்னையும், உங்களையும் வண்ணத்துப்பூச்சி போல சிறகடித்து பறக்கின்ற அழகான பரிசுத்தமான வாழ்வு வாழ அழைக்கின்றார். வண்ணத்துப்பூச்சி உருவாகிய விதங்களைப் போல கூட்டுப்புழுவாக இருக்கும் நிலையில் நீங்களும், நானும் இருந்துவிடக் கூடாது. கடவுள் நமக்கு தந்திருக்கும் அழகான வாழ்க்கை இன்னும் நாம் சிறகடித்து பறக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நம்மை தெரிந்து கொண்டிருக்கிறார்.

உனக்குள் பல கனவுகள் இருக்கலாம். ஆனால் களங்கம் இல்லாத வாழ்வு வாழ, உலக ஆசைகளிலிருந்து விடுப்பட்டு உன்னத வாழ்வு வாழ சிறகடித்துப் பறந்திட வா. வானம் தான் உனது எல்லையாக இருக்கட்டும். பரிசுத்தம் உனது (சிந்தையாகட்டும்) நடத்தையாகட்டும். இயேசுவோடு நடப்பது உனது வாழ்க்கை ஆகட்டும். உலக வாழ்விலிருந்து விடுபட்டு, உன்னத வாழ்வில் சிறகடித்து பறக்க உன்னை வாழ்த்துகிறேன்.

சேலம் பெத்தேலில் நடந்த நமது தமிழ் மாநில முகாமில் 387 வாலிபர்கள் கலந்து கொண்டனர். வாலிபர்கள் முகாமில் கலந்து கொள்ள ஜெபித்து, உற்சாகப்படுத்தி, அழைத்து வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலந்துகொண்ட வாலிப உள்ளங்களில் பரிசுத்த ஆவியானவர் நடப்பித்த கிரியைகளைக் கண்டு ஆண்டவரை அதிகமாக துதிக்கிறேன். வாலிபர் கூடுகையில் நமது பிள்ளைகள் எடுத்த தீர்மானத்தில் நிலையாக நிற்க உங்களின் தனிப்பட்ட ஜெபங்களில் நினைவுக் கூறுங்கள். இந்த மாதம் நடைபெறவுள்ள மாநில முகாமின் பின்தொடர் ஊழியங்கள் ஆசீர்வாதமாக இருக்கவும், நல்ல விளைவுகள் உண்டாகவும் தொடர்ந்து உங்கள் ஜெபங்களில் எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

அழகான பாவமில்லாத, பரிசுத்தமான வாழ்வு வாழ்ந்து சிறகடித்துப் பறக்க உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்.

 

கிறிஸ்துவின் பணியில்,

 

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   June-Kerith2025Tamil.pdf

>> Archives
2022 (8)
2021 (9)
2016 (12)
2012 (12)